News
தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் 17 மொழிகளில் வெளியாகிறது !

பேட்ட படத்தை தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஜகமே தந்திரம். தனுஷ் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படம் வருகிற ஜூன் 18-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது.
தமிழில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் படத்தை தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் உள்பட சுமாராக 17 மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
இதுவரை பல தமிழ் படங்கள் ஓடிடி வெளியானாலும் அவை அதிகமான மொழிகளில் டப் செய்து வெளியிடப்படவில்லை. ஓடிடியில் வெளியாகும் ஒரு தமிழ் திரைப்படம் ஒன்று 17 மொழிகளில் டப் செய்து வெளியாவரு இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.