News

ஜெயம் ரவியின் கோமாளி படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த காஜல் அகர்வால்

Published

on


விஜய்,அஜித் என முன்னணி நடிகர்களுடன் நடித்த காஜல் அகர்வால் அடுத்து இவர் ஜோடி சேர்ந்துள்ள நடிகர் ஜெயம் ரவி முதல் முறையாக இருவரும் ஜோடி சேர்ந்து நடிக்கும் படம் கோமாளி.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாகவே நடைபெற்று வந்தது இந்த நிலையில் இதில் நடித்து வந்த காஜல் அகர்வால் தனது படப்பிடிப்பு காட்சிகள் முழுவதையும் முடித்து விட்டார். இவரை அந்த படக்குழு பிரியாவிடை கொடுத்து வழியனுப்பி வைத்தனர்.

ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்த்ஹ்டா ஹெக்டே, கே.எஸ்.ரவிகுமார், யோகிபபு, கவிதா, சம்பத்ராஜ், நிதின் சத்யா, பசுபதி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ளார். ஹிப்ஹாப் தமிழா இசையில் கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவில், ப்ரவீண் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது.

Trending

Exit mobile version