News

ஜெயம் ரவியுடன் ஜோடி சேரும் இரு நாயகிகள்

Published

on

கோமாளி படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் ஜெயம் ரவி இயக்குநர் அஹமத் இயக்கத்தில் ஜன கன மன என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ஒரு ஸ்பை த்ரில்லர் படமாக உருவாகி வருகிறது.

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் துருக்கி நாட்டில் நடந்து வருகிறது. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக டாப்ஸி மற்றும் டயானா எரப்பா நடித்து வருகிறார்கள். பாலிவுட் பக்கம் சென்று விட்ட பின்னர் மிகவும் பிஸியாகி விட்ட நடிகை டாப்ஸி தமிழில் வந்த பட வாய்ப்புக்களை ஏற்க்காமல் இருந்து வந்தார்ஆனால் இந்த படத்தில் நடிக்க கேட்டதும் உடனடியாக ஒப்புதல் கொடுத்து விட்டார்.

செக்க சிவந்த வானம் படத்தில் சிம்புவின் காதலியாகவும் மனைவியாகவும் நடித்தவர் டயானா எரப்பா இந்த படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்து வருகிறார். நடிகர் ரகுமான் எம்.எஸ் பாஸ்கர் முக்கியமான வேடங்களில் நடிக்கிறார்கள்.

அது மட்டும் அல்லாமல் ஈரானிய நடிகையான எல்னாஸ் நொரவ்சி போலீஸ் அதிகாரியாக இந்த படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version