News

ஜோதியாவின் பொன்மகள் வந்தாள் அமேசான் ப்ரைமிற்கு விற்க்கப்பட்டதா?

Published

on

அறிமுக இயக்குனர் ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா நடித்து வெளிவரவிருக்கும் படம் ‘பொன்மகள் வந்தாள்’ இப்படதை சூர்யாவின் 2D நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் ஆண்கள் பார்க்க வேண்டிய ஒரு பெண்கள் படம் என்று கூறுகிறது படக்குழு இப்படதில் பார்த்தீபன்,பாக்கியராஜ்,தியாகராஜன்,பிரதாப் போத்தன் பலர் முன்னனி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்க்கு 96 படத்தின் புகழ் கோவிந்த் வசந்தா இசயமைத்துள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் அனைத்தும் முடிவடைந்து இந்த மாதம் 28-ம் தேதி திரைக்கு வரவிருந்தது. தற்போது உள்ள ஊரடங்கு காரணமாக இப்படமும் வெளியாகவில்லை.

இந்நிலையில் இப்படத்தை திரையரங்கிள் வெளியிடாமல் நேரடியாக டிஜிட்டல் மார்க்கெட்டில் இரு மடங்கு லாபத்திற்கு விற்றுள்ளார். ஆம், அமேசான் ப்ரைம் இந்த படத்தை 9 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Trending

Exit mobile version