News

டாக்டர் அனிதா குடும்பத்துக்கு ஆறுதல் கூறிய நடிகர் விஜய்

Published

on

அரியலூரை சேர்ந்த அனிதா நீட் தேர்வுக்காக போராடி தற்கொலை செய்து கொண்டார். அனிதாவின் தற்கொலைக்கு பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

பல அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா துறையில் இருக்கும் அனைவரும் இறந்த அனிதாவிற்கு இரங்கல் தெரிவித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

மாணவி அனிதா இறந்த அன்றே இசையமைப்பாளர் & நடிகருமான ஜி.வி.பிரகாஷ் அனிதாவின் குடும்பத்திற்கு நேருல் சென்று ஆறுதல் கூறினார்.

இதனை தொடந்து இன்று காலை நடிகர் விஜய் அவர்களும் அனிதாவின் இல்லத்திற்கே சென்று அவரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். பின்னர் மாணவி அனிதாவின் உருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தினார். அதான் பின்னர் அனிதாவின் தந்தைக்கு ஆறுதல் கூறினார்.

Trending

Exit mobile version