Tamil News

டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகிறார் தெலுங்கு பட ஹீரோயின் !

Published

on

சிவகார்த்திகேயன் தற்போது கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் டாக்டர் படத்தில் நடித்து வருகிறார். டாக்டர் படத்தை கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் எஸ் கே புரோடக்சன்ஸ் இணைந்து தயாரித்து வருகின்றனர்.

டாக்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சிவகார்த்திகேயன் பிறந்தநாள் அன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் விதவிதமான கத்திகள் அவரை சுற்றி இருக்க கையில் ரத்தக்கறையுடன் கத்தியைப் பிடித்தபடி சிவகார்த்திகேயன் இருக்கிறார்.

இந்தப்படம் மருத்துவத்துறையில் உள்ள பிரச்சினைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கலாம் . இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மேலும் இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.

தற்போது டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக தமிழில் பிரியங்கா அருள் மோகன் அறிமுகமாகிறார். ஏற்கனவே இவர் தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்திருக்கிறார்.தெலுங்கில் கேங் லீடர் படத்தில் நானிக்கு ஜோடியாக அறிமுகமானார்.

டாக்டர் படத்தின் படப்பிடிப்பு தற்போது கோவாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு இசை அமைக்கிறார் அனிருத் ரவிச்சந்திரன். ஒளிப்பதிவு செய்கிறார் கார்த்திக் கண்ணன். டாக்டர் படத்தின் சேட்டிலைட் உரிமையை சன் டிவி வாங்கி இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

BY:

Trending

Exit mobile version