News

எண்ணம் போல்தான் வாழ்க்கை அசுரன் படத்தின் விருதுக்கு தனுஷ் அறிக்கை !

Published

on

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான திரைப்படம் அசுரன். இந்திரைப்படம் விமர்சன ரீதியாகவும் சரி வசூல் ரீதியாகவும் சரி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மிகப்பெரிய வசூல் சாதனையும் செய்தது தனுஷ் சினிமா பயணத்தில் 100 கோடி வசூல் செய்த முதல் திரைப்பம் இதுவாகும்.

இந்நிலையில் இதுகுறித்து ஓம் நமசிவாய என குறிப்பிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் தனுஷ். அதில் அவர் “சிவசாமி கதாப்பாத்திரத்தை எனக்கு அளித்ததற்கு நன்றி வெற்றிமாறன். இயக்குனர் பாலு மகேந்திரா அலுவலகத்தில் உங்களை சந்தித்தபோது உண்டான நட்பு. தற்போதுவரை நான்கு படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளோம். இரண்டு படங்கள் இணைந்து தயாரித்துள்ளோம். என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி. எனக்காக அடுத்த என்ன கதை வைத்துள்ளீர்கள் என ஆவலாக காத்திருக்கிறேன்”

எண்ணம் போல்தான் வாழ்க்கை என்று கூறியுள்ளார்.

Trending

Exit mobile version