News

வெளியீட்டுக்கு முன்பே ரூ.25 கோடி லாபம் பார்த்த தனுஷின் கர்ணன் !

Published

on

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலைப்புலி எஸ்.தாணு இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன் இந்த திரைப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து ஏப்ரல் 9-ம் தேதி ரிலீசுக்காக காத்திருக்கிறது. தற்போது இப்படத்தின் வியாபாரம் மற்றும் விளம்பர பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் சினிமா வட்டாரத்தில் இந்த படத்தின் வியாபாரம் பற்றி ஒரு ஆச்சர்யமான தகவல்களை பேசி வருகின்றனர். தனுஷ் & தாணு கூட்டணியில் உருவான அசுரன் படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. அதனால் இபப்டத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ள நிலையில் கர்ணன் படத்தை தாணு வெளியீட்டுக்கு முன்னரே ரூ.25 கோடி ரூபாய் அளவுக்கு வியாபாரம் செய்யுள்ளாராம். இந்த செய்தி சினிமா வட்டாரத்தில் மிகப்பெரிய ஆச்சர்யமாக பார்க்கப்படுகிறது.

விஜய், அஜித், ரஜினி படங்களுக்கு மட்டுமே இது போல நடந்து வந்த நிலையில் தனுஷ் படத்துக்கு இப்படி நடந்திருப்பது மிகப்பெரிய ஆச்சர்யம்தான் என்கிறார்கள் சினிமா வியாபாரிகள்.

Trending

Exit mobile version