News

தனுஷ் படத்தில் நாயகியாக தமிழுக்கு அறிமுகமாகும் உப்பென்னா நடிகை கீர்த்தி ஷெட்டி !

Published

on

தெலுங்கில் கடந்த மாதம் வெளியாகி 100 கோடிக்கும் மேல் வசூல் சாதனை செய்த திரைப்படம் உப்பென்னா.

அந்த திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் கீர்த்தி ஷெட்டி. படம் வெளியாகி ரசிகர்கள் படத்தை கொண்டாடியதை விட இவரின் அழகை பார்த்து கொண்டாடியவர்கள்தான் அதிகம்.

தற்போது இவருக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கியுள்ளது. இந்நிலையில் தமிழில் இவர் இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் புதிய படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார்.

இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version