Uncategorized

மீண்டும் தனுஷ் – சிம்பு ரசிகர்கள் திடீர் மோதல் !

Published

on

சமீபத்தில் வெளியான ஈஸ்வரன் படத்தில் நான் அழிப்பதற்கு வந்த அசுரன் அல்ல காப்பதற்கு வந்த ஈஸ்வரன் என்று சிம்பு பேசிய வசனம் தனுஷ் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அவர்கள் சிம்புவிற்கு எதிராக டுவிட் செய்து வந்தனர். இந்நிலையில் நடிகர் தனுஷ் டுவிட்டர் பக்கத்தில் இதுவரை நடிகர் என்ற தனது பயோவில் தற்போது அசுரன்.நடிகர் என மாற்றியது சமூக வலைத்தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிம்புவுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே அசுரன்/நடிகர் என தனுஷ் பதிவு செய்ததாக அவரது ரசிகர்கள் பதிவு செய்து வருகிறார்கள். தனுஷ் தற்போது சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தராரிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் இன்னும் பெயரிப்படாத படத்தில் நடித்து வருகிறார். க்ரைம் திரில்லரான இந்த படத்தில் தனுஷ் பத்திரிக்கையாளார் வேடத்தில் நடிக்கவுள்ளார்.

Trending

Exit mobile version