News

ஜகமே தந்திரம் திரையரங்கிலா இல்லை ஓ.டி.டி தளத்திலா குழப்பத்தில் தனுஷ் ரசிகர்கள் !

Published

on

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் ரஜனியின் பேட்டை திரைப்படத்திற்க்கு பின்னர் தனுஷை வைத்து இயக்கியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம்.

கொரோனா வைரஸ் காரணமாக 100 சதவீத திரையரங்கு ரசிகர்கள் அனுமதி இல்லாததாம் ஜகமே தந்திரம் திரைப்படத்தை நேரடியாக நெற்ஃபிளிக்சு ஓ.டி.டி தளத்தில் வெளியாக இருப்பதாக நேற்று இரவில் இருந்து ஒரு தகவல் இணையத்தில் பரவி வருகிறது.

இந்த படம் தனுஷின் 40-வது திரைப்படமாகும் இப்படத்தில் இடம்பெற்றுள்ள ரகிட ரகிட ரகிட பாடல் தனுஷின் பிறந்தநாளையொட்டு கடந்த ஜூலை மாதம் வெளியாகி மிகப்பெரிய வைரல் கிட் ஆனது. அதை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாவது பாடல் புஜ்ஜி என்ற பாடலும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது அந்த பாடல்.

இந்நிலையில் ஜகமே தந்திரம் திரைப்படம் நேரடியாக நெற்ஃபிளிக்சு தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது இதனை கேட்ட ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர் இருந்தாலும் படக்குழுவிடம் இருந்து இது பற்றி எந்த ஒரு அதிகார்வபூர்வ தகவலும் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version