News

தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் தகவல் வெளியானது !

Published

on

தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான “பட்டாஸ்” திரைப்படம் ரசிகர்கள் மத்தயில் நல்ல வரவேற்பை பெற்றது. அடிமறை கலையின் பெருமைகளை எடுத்துக்காட்டிய இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.

அப்பா தனுஷ் தாடி மீசையுடன் கம்பீரமான தோற்றத்திலும் , மகன் தனுஷ் புள்ளிங்கோ கெட்டப்பில் நடித்து, தனது அசுரத்தனமான நடிப்பை வெளிப்படுத்தினார். பட்டாஸ் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் தனுஷ் – சத்ய ஜோதி பிலிம்ஸ் இணையும் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது . சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் D43 என்ற படத்தை இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்குகிறார் .

இவர் இயக்கத்தில் வெளியான துருவங்கள் பதினாறு , நரகாசுரன் , மாபியா படங்கள் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் , கார்த்திக் நரேன் இணையும் இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைக்கிறார் . இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் விரைவில் தொடங்க உள்ளது. பட்டாஸ் படத்தையும் தயாரித்தது சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தான் என்பது குறிப்பிடதக்கது.

By : Saranya

Trending

Exit mobile version