News

தனுஷ் பட வில்லனுடன் மோதும் சீயான் விக்ரம்

Published

on

கவுதம் மேனன் மற்றும் விக்ரமை வைத்து இயக்கம் திரைப்படம் துருவ நட்ச்சத்திரம். இந்த ஆண்டு மிகப்பெரிய வெளியீடுகளில் இந்த படமும் ஒன்றாக இருக்கிறது.

ரிட்டு வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா சரத்குமார், பார்த்திபன்
மற்றும் திவ்யதர்ஷினி ஆகியோருடன் முக்கிய நடிப்பில் விக்ரம்
நடிக்கிறார்.

மலையாள நடிகர் பிரிதிவிராஜ் படத்தின் முக்கிய வில்லனாக நடிப்பார்
என்று கூறப்பட்டது.

இது வரையில் முக்கிய வில்லன் யார் என்ற தகவல் ரகசியமாகவே வைக்கப்பட்டு வந்தது. ஆனால் இன்று விக்ரமின் பிறந்தநாள் இன்றைய தினத்தில் அனைவருக்கும் விருந்து கொடுக்கும் விதமாக துருவ நட்ச்சத்திரம் படத்தின் முக்கிய வில்லன் மலையாள நடிகர் விநாயகன் என்று அதிகார்பபூர்வ தகவல் வெளிவந்துள்ளது. இவர் இதற்க்கு முன்னதாக விஷால் நடிப்பில் வந்த சண்டைக்கோழி படத்திலும் தனுஷ் நடிப்பில் வெளிவந்த மரியான் படத்திலும் வில்லனாக மிரட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கவுதம் மேனனை ஒரு பேட்டியில் கூறும்போது வில்லன் விநாயகன் நடிப்பை பார்த்து வியந்து பாராட்டியதாகவும்
படத்தின் வெளியீடு வரை வில்லன் யார் என்று தெரியாமல் ரகசியமாக வைத்துக்கொள்ளும் படி
கேட்டுக்கொண்டார்

Trending

Exit mobile version