Connect with us
 

News

தனுஷின் புதிய வீட்டு பூமி பூஜையில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் !

Published

on

நடிகர் தனுஷ் தனது மாமனார் ரஜினிகாந்த் வீட்டிற்கு அருகிலேயே போயஸ் கார்டனில் 22 கோடிக்கு ஒரு இடத்தை வாங்கியிருக்கிறார் என தகவல்கள் வெளியாகின. நடிகர்களுக்கு போயஸ் கார்டனில் வீடு வாங்கவேண்டுமென்பது எப்போதுமே கனவாக இருக்கும். இப்போது தனுஷூக்கு அது நிறைவேறியிருக்கிறது.

அவர், போயஸ் கார்டனில் வீடு வாங்க இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. நடிகர் ரஜினி போயஸ் கார்டனில் தான் வசிக்கிறார். தற்பொழுது ரஜினியை ஐஸ்வர்யா தான் கவனித்து வருகிறார். தவிர, பேரக் குழந்தைகளையும் அடிக்கடி பார்க்க விரும்புகிறாராம் ரஜினி. அதனால், ரஜினி வீட்டுப் பக்கத்திலேயே இருக்க வேண்டுமென்பதால் தான், தனுஷின் இந்தப் புதிய ஏற்பாடு என்றும் சொல்லப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை போயஸ் கார்டனில் தனுஷின் புதிய வீட்டு பூமி பூஜை நடைபெற்றது இதில் ரஜினிகாந்த் கலந்து கொண்டுள்ளார். உடல்நிலை பாதிப்பால் வீட்டிலேயே சில காலம் ஓய்வெடுத்து வந்த ரஜினி முதல் முறையாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். மேலும் அண்ணாத்த படப்பிடிப்பும் விரைவில் தொடங்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Continue Reading