News

தன் சம்மளத்தை சொல்லி ஹீரோவுக்கு அதிர்ச்சி கொடுத்த லேடி சூப்பர் ஸ்டார் !

Published

on

தென்னிந்திய நடிகைகளில் அதிக சம்பளம் வாங்குபவர் நயன்தாரா ஒரு படத்துக்கு ரூ.5 கோடி முதல் ரூ.8 வரை அவர் சம்பளமாக பெறுகிறார். இப்போது ஒரு படத்துக்கு ரூ.8 கோடி சம்பளம் கேட்டு தயாரிப்பாளரை அதிர வைத்திருக்கிறார்.

அந்த தயாரிப்பாளர் வேறு யாரும் இல்லை. அவரே ஒரு நடிகர்தான். தெலுங்கு பட ஹீரோ நிதின் இவர்த்தான் அந்த தயாரிப்பளரும் கூட. இந்தியில் வெளியான அந்தாதுன் என்ற படத்தின் தெலுங்கு உருமையை நிதின் வாங்கியுள்ளார்.அந்த படத்தில் தபு நடித்த கதாப்பாத்திரத்தில் நடிக்க நயன்தாராவை கேட்டுள்ளார். அதற்க்குதான் 8 கோடி சம்பளம் கேட்டுள்ளார்.

அதற்கு காரணம் அது வில்லி வேடம் என்பதால். படத்தில் முழுக்க முழுக்க ஹீரோவுக்கு எதிராக சூழ்ச்சிகள் செய்யும் வில்லத்தனமான கேரக்டர் என்பதால் இவ்வளவு சம்பளம் கேட்டுள்ளார்.

வழக்கமாக நயன்தாரா வாங்கும் சம்பளத்தையே குறைத்து கொடுக்கலாம் நானும் ஒரு நடிகர் என்பதால் இதற்க்கு நயன்தாரா ஒப்புக்கொள்வார் என்று நிதின் நினைத்தாராம். ஆனால் தடாலடியாக நயன்தாரா சம்பளத்தை உயர்த்தி கேட்டு ஷாக் கொடுத்துள்ளார் லேடி சூப்பர் ஸ்டார்.

குறைந்த செலவில் இந்த படத்தை எடுக்க நினைத்துள்ள நிதின் இந்த படத்துக்கு நயன்தாரா வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம்.

Trending

Exit mobile version