News

தமிழகத்தில் அதிக வசூல் செய்த பட்டியலில் விஸ்வாசம் முதல் இடம்

Published

on


விஸ்வாசம் படத்தின் வசூல் பற்றி பல வதந்திகள் வந்து கொண்டிருந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பளார் சத்யஜோதி தியாகராஜன் வெளிப்படையாக உண்மையை கூறியுள்ளார்.

விஸ்வாசம் – பேட்ட இரு படங்களும் ஒரே நாளில் வெளியானது அந்த நாளில் இருந்து இரு படங்களும் வசூல் சாதனை படைத்துவிட்டது என பல செய்திகள் வந்தது. ஆனால் தயாரிப்பு தரப்பில் இருந்து அப்பிடி ஒரு அதிகார்வபூர்வ தகவலும் வெளியாக வில்லை.

சமூக தளங்களில் இருக்கும் டிராக்கர்ஸ் மற்றும் ரசிகர்கள் இருவருக்கும் இருந்த மோதலால் இரு படங்களில் வசூலை ஜோடி சேர்த்து பேசப்பட்டன. பேட்ட படம் 11 நாளில் 100 வசூல் செய்து விட்டது என்றும் விஸ்வாசம் படம் 8 நாளில் 125 கோடி வசூல் சாதனை என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் விஸ்வாசம் படத்தின் தயாரிப்பாளர் சத்யாஜோதி தியாகராஜன் முரல் முறையாக விஸ்வாசம் படத்தின் வசூல் பற்றி கூறி உள்ளார். அதில் அவர் கூறியதாவது விஸ்வாசம் படம் ஒரு பிளாக் பஸ்டர் ஹிட் இதுநாள் வரை நாங்கள் தயாரித்த படங்களிலே அதிகமாக வசூல் செய்த படம் . தமிழகத்தில் உள்ள திரையரங்கம் மூலமாக மட்டும் 125 கோடி முதல் 135 கோடி வசூல் செய்த செய்தது.

விநியோகஸ்தர்களுக்கு மட்டுமே 70 முதல் 80 கோடி ரூபாய் வரை பங்குக் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு இந்தப் படம் மிகவும் பிடித்ததால் இவ்வளவுப் பெரிய வசூலை நிகழ்த்தியுள்ளது’ எனக் கூறினார்.

Trending

Exit mobile version