News
தமிழகத்தில் திரையரங்குகள் மூடுவது அதிகரிப்பு !

கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்கு பின்னர் திரையரங்குகள் திறக்கப்பட்டாளும் மக்கள் தியேட்டர்கள் பக்கம் ஆர்வம் காட்டவில்லை. ஓரிது படங்களுக்கு மட்டுமேதான் வரவேற்பு கிடைத்தன. மற்ற படங்களுக்கு முதல் நாள் காட்சிக்கு கூட கூட்டம் இல்லை.
இதன் காரணமாக பல தியேட்டர்களை சில வாரங்களாக மூடி வைத்துள்ளனர். சில தியேட்டர்களில் சனி மற்றும் ஞாயிறு காட்சிகள் மட்டுமே நடக்கின்றன. மீண்டும் கொரோனா அதிகரித்து வருவதால் மக்களுக்கு தியேட்டர்களுக்கு வர தயக்கம் காட்டுகின்றனர். இதனால் தியேட்டர்களை மூடும் நிலை அதிகமாகி வருகிறது. இதே நிலை நீடித்தால் அடுத்த மாதம் வெளியாவதாக அறிவிக்கப்பட்ட படங்களின் வெளியீடும் தள்ளிப்போகலாம்.