Connect with us
 

News

தயவு செய்து இதை யாரும் செய்யாதீர்கள் ஒன்றரை வருட போராட்டம் – லோகேஷ் கனகராஜ் உருக்கம் !

Published

on

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். ராக் ஸ்டார் அனிருத் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.

வரும் ஜனவரி 13 தேதி இப்படம் உலகமெங்கும் தியேட்டரில் வெளியாகயுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் புரமோஷன் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் விஜய் மற்றும் விஜய்சேதுபதி இடம்பெற்றுள்ள காட்சி குறித்த புகைப்படத்தை இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.

இந்நிலையில் மாஸ்டர் படத்தின் காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது இதை பார்த்த படக்குழுவினர் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளார் இது குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார் அதில்.

அன்புக்குரியவர்களுக்கு, மாஸ்டர் படம் ஒன்றரை வருடப் போராட்டங்களுக்குப் பிற்கு திரைக்கு வருகிறது. நீங்கள் எல்லோரும் தியேட்டரில் படம் பாருங்கள். எதாவது படம் குறித்து லீக் வெளியே வந்தால் அதை ஷேர் செய்ய வேண்டாம். நன்றி இது உங்களுடைய மாஸ்டர் எனத் தெரிவித்துள்ளார்.