News

தயாரிப்பாளராக மாறும் மாஸ்டர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் !

Published

on

பிரபல இயக்குநர்கள் ஓரிரு இயக்குநர்கள் அதன் பின்னர் திடீரென தயாரிப்பாளர்களாக மாறிவிடுகிறார்கள். அந்த வகையில் ஷங்கர், முருகதாஸ், அட்லி, பா.ரஞ்சித், வரிசையில் தற்போது மாஸ்டர் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணைந்துள்ளார்.

இந்த இயக்குநர்கள் தங்களுடைய உதவி இயக்குநர்களை இயக்குனராக்க தயாரிப்பாளராக மாறினார்கள் என்பது குறிப்பித்தக்கது. அதே பாணியில் தற்போது தன்னுடன் பணிபுரிந்த இயக்குநர்கள் மற்றும் உதவி இயக்குநர்களுக்காக லோகேஷ் கனகராஜ் தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் முதல் படத்தை ரத்தினகுமார் என்பவர் இயக்க உள்ளதாகவும் இவர் ‘மாஸ்டர்’ படத்தில் லோகேஷ் கனகராஜ்யுடன் பணிபுரிந்தவர் என்பது மட்டுமன்றி ‘மேயாத மான், ஆடை’ படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தகது.

இவர் இயக்கவிருக்கும் இப்படத்தில் ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிட்டத்தது.

Trending

Exit mobile version