News
தர்பாவில் இன்று இணையும் லேடி சூப்பர் ஸ்டார்
சர்க்கார் படத்தின் வெற்றிக்கு பின்னர் ஏ.ஆர்.முருகதாஸ் பேட்ட படத்தின் வெற்றிக்கு பின்னர் ரஜினிகாந்த் இருவரும் இணைந்திருக்கும் படம்தான் தர்பார் இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையில் கடந்த சில தினங்களாக நடந்து வருகிறது. இது நாள் வரையில் ரஜினிகாந்த் சம்மந்த பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் இன்று முதல் ரஜினி – நயன்தாரா சம்மந்தபட்ட காட்சிளின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இந்த தகவலை லைகா நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்தது.
ரஜினி – நயன்தாரா இருவருக்கும் இடையில் உள்ள ரொமான்ஸ் மற்றும் குடும்ப காட்சிகள் இன்று முதல் படமாக்கப்பட உள்ளது. இதுவரையில் நயன்தாரா நடித்த படங்களில் இருந்து இந்த படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் நடிக்கவிருக்கிறார் என்று கூறுகிறது படக்குழு.
சென்னையில் நடிகர் விஜய்யுடன் 63 படத்திலும் ஐதராபாத்தில் சிரஞ்சீவியுடன் ‘ஸ்ரீசயிர நரசிம்மரெட்டி’ படப்பிடிப்பிலும், மும்பையில் ரஜினியுடன் தர்பார் படத்தில் என சினிமாவில் உள்ள உச்ச நடிகர்களுடன் மாறி மாறி நடித்து வருகிறார் என்பது கூடுதல் தகவல்.