News
கொரோனா இரண்டாம் அலை எதிரொலி மீண்டும் தள்ளிப்போகும் தலைவி திரைப்படம் !

மறைந்த முன்னாள் முதல் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தலைவி என்ற பெயரில் திரைப்படமாக உருவாக்கிருக்கிறார் இயக்குநர் ஏ.எல்.விஜய் இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர். அரவிந்த் சாமி நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, பூர்ணா, மதுபாலா ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தை கடந்த ஆண்டு ஜூன் 26-ம் தேதி வெளியிட திட்டமிட்டது படக்குழு ஆனால் கொரோனா லாக்டவுன் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் படம் திட்டமிட்டது போல குறிதா தேதியில் வெளியிட முடியவில்லை. இந்நிலையில் இந்தாண்டு ஏப்ரல் 23-ம் தேதி வெளியாகும் என்று அறிவித்தது படக்குழு.
தற்போது மீண்டும் கொரோனா 2-வது அலை காரணமாக பாதிப்புகள் அதிகரித்து வருவதால் மீண்டும் திரையரங்குகளில் 50% சதவீத இருக்கைகள் மட்டுமே அனுமதி கொடுத்துள்ளது அரசாங்கம்.
இதன் காரணமாக ஏப்ரல் 23-ந் வெளியாகவிருந்த தலைவி திரைப்படம் வெளியாகாது என்று அறிவித்துள்ளது படக்குழு. கொரோனா பாதிப்புகள் குறைந்த பின்னர் மீண்டும் புதிய வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளாது.