Connect with us
 

News

தல அஜித்தை இயக்கும் பெண் இயக்குநர் !

Published

on

மாதவனை வைத்து இறுதிச் சுற்று என்ற மிகப்பெரிய படத்தின் வெற்றிக்கு பின்னர் சூர்யாவை வைத்து ‘சூரரைப்போற்று’படத்தை இயக்கியுள்ளார் பெண் இயக்குநர் சுதா கொங்காரா. அதன் பின்னர் இவர்தான் தளபதி விஜய் நடிக்கும் தளபதி 65 இயக்க விஜய் அவர்களிடம் ஒரு கதையை சொல்லியிருக்கிறார் அதில் சில மாற்றங்களை செய்யும்படி கூறியுள்ளார் ஆனால் அதை மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தல அஜீத் அவர்களிடம் இருந்து சுதா கொங்காரா அவர்களுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளதாம் விஜய்க்காக தயார் செய்த கதையை அஜீத் அவர்களிடம் கூற எப்படியும் அஜீத் அவர்கள் அதில் நடிக்க சம்மதம் தெரிவிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக நெருங்கிய கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.