Connect with us
 

News

தளபதிக்கு ஜோடியாக ரஜினி பட நாயகி?

Published

on

அட்லீ இயக்கத்தில் தற்போது நடித்து வெளிவரவிருக்கும் படம் பிகில் இந்த படத்தின் இசை வெளியீடு நாளை நடைபெறும் நிலையில் விஜய் அடுத்து நடிக்கும் படத்தை மாநகரம்,கைதி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த நிலையில் இந்த படத்தில் விஜய் அவர்களுக்கு ஜோடியாக கியாரா அத்வானி, ராஷ்மிகா மந்தனா மற்றும் ராஷி கண்ணா ஆகியோரின் பெயர்கள் கூறிவந்தனர் அதில் ராஷ்மிகா வவேறு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனதால் நடிக்க முடிவில்லை என்று கூறிவிட்டார்.

தற்போது தளபதி 64 படத்தில் விஜய்க்கு ஜோடியாக பேட்ட படத்தில் சசிகுமார் மனைவியாக நடித்த நடிகை மாளவிகா மோகனன் ஒப்பந்தம் செய்துள்ளார் என்ற ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் வில்லனாக நடிக்க வைக்க மக்கள் செல்வன் விஜய்சேதுபதி அவர்களை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடைபெறுவதாக தெரிகிறது இது எந்த அளவிற்கு உண்மை என்று விஜய்சேதுபதி தரப்பில் இருந்து தகவல் வந்தால் மட்டுமே தெரியும்.