Connect with us
 

Tamil News

தளபதி உடையில் தாறுமாறு அப்டேட் கொடுத்த தனுஷ் !

Published

on

தமிழ் சினிமாவில் பிளாக் பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்து வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர்களில் நடிகர் தனுஷ் அவர்களும் இணைந்து விட்டார் இவர் நடித்த அசுரன் திரைப்படம் 100 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி நல்ல வசூல் சாதனையும் செய்தது. கடைசியாக வெளியான பட்டாஸ் திரைப்படமும் யாருக்கும் நஷ்டம் இல்லாமல் ஒரு நல்ல வசூலையே கொடுத்தது.

தற்போது தனுஷ் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘கர்ணன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார், இந்த படத்தையும் தயாரிப்பாளர் வி கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கும் இப்படத்தில் யோகி பாபு, மலையாள நடிகர் லால், நடிகை லட்சுமி பிரியா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

திருநெல்வேலி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் இன்று மாலை தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் கர்ணன் படத்தின் 90 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டது எனற ஒரு பதிவை பதிவு செய்து ஒரு புகைப்படம் ஒன்றையும் பதிவு செய்தார். அந்த புகைப்படதில் தனுச் அணிந்திருக்கும் உடையில் தளபதி புகப்படம் மற்றும் தளபது என்று எழுத பட்டிருக்கும் T-Shirt ஒன்றை தனுஷ் அணிந்துள்ளார்.