News

தளபதி விஜய்க்கு சொந்தம் ஆகிறார்கள் அதர்வா குடும்பம்

Published

on

தளபதி விஜய் அவர்கள் தந்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களின் தங்கை பேத்தியை இறந்த நடிகர் முரளியின் இளைய மகன் திருமணம் செய்ய இருக்கிறார்.

முரளிக்கு இரண்டு மகன்கள் ஒருவர் அதர்வா மூத்த மகன் இவர் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகி தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். இவரின் தம்பியான ஆகாஷ் சிங்கப்பூரில் எம்.பி.ஏ படித்து முடித்துள்ளார். தற்போது இவர் விஜய் அவர்களின் அத்தையின் பேத்தியை மிக விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார்.

இயக்குனர் எஸ்.ஏ.சியின் தங்கை மகளான விமலா என்பவரின் மகளான சினேகா என்பவர் சட்டம் ஒரு இருட்டறை படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார். இவரும் ஆகாஷும் சிங்கப்பூரில் படிக்கும்போது காதல் மலர்ந்துள்ளது. வெவ்வேறு மதத்தைச் சேர்ந்த இருவரும் தங்கள் குடும்பத்தை சம்மதிக்க வைத்து திருமணம் செய்துகொள்ள உள்ளனர். இருவருக்குமான நிச்சயதார்த்தம் டிசம்பர் 6 ஆம் தேதி நடக்க இருக்கிறது.

Trending

Exit mobile version