News

தளபதி 63 படத்தில் கேப்டானாக இணையும் முன்னணி நடிகை

Published

on


அட்லீ – விஜய் மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் இன்னமும் பெயர் சூட்ட படாத படம் ஒன்றில் நடித்து வருகிறார் அதற்கு தளபதி 63 என்று அனைவரும் அழைத்து வருகிறார்கள். இந்த படம் பெண்களின் கால்பந்து போட்டியை மையமாக வைத்து உருவாகி வருகிறது. இந்த படத்தில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இந்த படத்தில் விஜய் பயிற்சி கொடுக்கும் பெண்கள் கால்பந்து அணியின் கேப்டானாக நடிகை ரெபா மோனிகா ஜான் ஒப்பந்தமாகியுள்ளார். இவர் ஏற்கனவே ஜெய் நடித்த ‘ஜருகண்டி’ படத்தில் நாயகியாக நடித்துள்ளார். மேலும் தற்போது இரண்டு தமிழ்ப்படங்கள் மற்றும் ஒரு கன்னட படத்திலும் நடித்து வருகிறார்.

இவர் கேப்டன் – விஜய் பயிற்சியாளர் என்பதால் இருவரும் இணைந்து நடிக்கும் காட்சிகள் அதிகமாக இருக்கும் இந்த படம் வெளியான பின்னர் தமிழில் இவருக்கு அதிகமான பட வாய்ப்புக்கள் குவியும் என எதிர் பார்க்கப்படுகிறது.

அட்லி இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் நீண்ட இடைவெளிக்கு பின் விஜய், நயன்தாரா ஜோடி சேர்ந்துள்ளனர். இந்த படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வரவுள்ளது,

Trending

Exit mobile version