News

தளபதி 64 படக்குழுவினரனை ஏமாற்றி விட்டாரா மக்கள் செல்வன்

Published

on

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 64 திரைப்படம் மிக வேகமாக நடந்து வருகிறது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பில் இருந்து சற்று பிரேக் எடுத்துள்ளார் தளபதி விஜய். காரணம் தனது குடும்பத்துடன் லண்டன் சென்று அங்கு கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை கொண்டாடிய பின்னர் அவர் ஜனவரி முதல் வார இறுதியில் சென்னை திரும்புவார். பின்னர் படத்தின் இருந்து கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறும்.

தற்போது கிடைத்த தகவலின் படி விஜய் சேதுபதி சம்மந்தபட்ட காட்சிகள் ஒன்று கூட படமாக்கவில்லை. அதற்கு விஜய் சேதுபதி கால்ஷீட் தராமல் இழுத்தடித்ததுதான் காரணம் என்றும் கூறப்படுகிறது.

விஜய்சேதுபதி இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனாபோது நவம்பர் இறுதி முதல் ஜனவரி இறுதி வரை நடித்து கொடுப்பதாக வாக்கு கொடுத்தார். அனால் இவர் நடுவில் பல படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகிவிட்டார். அதனால் கால்ஷீட் தரவில்லை என்றும் தற்போது தான் அவர் இந்த படத்தில் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் தொடர்ச்சியாக ஜனவரி இறுதிவரை அவர் இந்தப் படத்திற்காக தேதிகளை ஒதுக்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து டிசம்பர் மற்றும் ஜனவரி முழுவதும் விஜய் மற்றும் விஜய்சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படும் என்றும் பிப்ரவரி மத்தியில் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து விடும் என்றும் கூறப்படுகிறது

Trending

Exit mobile version