News

தளபதி 65 இயக்குநர் ஷங்கரா ?

Published

on

தற்போது தளபதி விஜய் அவர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி மாஸ்டர் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னும் மாஸ்டர் படமே முடிவடையாத நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை இயக்க போவது யார் என்ற ஆர்வம் ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது. தளபதி 65 படத்தை சுதா கொங்கரா இயக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இன்னும் எந்த ஒரு உறுதியான அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்நிலையில் விழா ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் ஷங்கர் பேசும் போது, நானும் ரெடி, விஜய்யும் ரெடி எப்போ வேண்டுமானாலும் நடக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.

இயக்குனர் ஷங்கர் தற்போது இந்தியன்2 படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். இந்தப் படம் முடிந்தவுடன் அடுத்து விஜய்யை வைத்து இயக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆனால் இதுபற்றி எந்த ஒரு அதிகாரபூர்வமான தகவல் வெளியாகவில்லை. ஏற்கனவே 2012 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் நண்பன் படத்தில் விஜய் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

By : Saranya

Trending

Exit mobile version