News

தளபதி 65 திரைப்படத்தில் மீண்டும் இணையும் பிரபலமான ஒளிப்பதிவாளர் !

Published

on

தளபதி விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரிக்கும் திரைப்படம் தளபதி 65 இப்படத்தை கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் பட இயக்குநர் நெல்சன் இயக்கவுள்ளார்.

இப்படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். மற்ற தொழினுட்ப கலைஞர்கள் நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்று கூறப்படுகிறது.

இவர் இதற்கு முன்னர் விஜய் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான நண்பன் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர்.

Trending

Exit mobile version