News
தளபதி 65 படத்தின் பல மாத கேள்விக்கு இன்று அதிகார்வபூர்வ பதில் கிடைத்தது !

நெல்சன் இயக்கத்தில் தளபதி நடிக்கும் தளபதி 65 திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு என்று அறிவிப்பு ஒன்றை அறிவித்து இருந்தது.
அந்த அறிவிப்பின்படி இன்று மாலை 5 மணிக்கு அந்த அறிவிப்பை வெளியிட்டது படக்குழு அது என்னவென்றால் முதன் முறையாக விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே ஜோடி சேர உள்ளார் என்பதுதான்.
பூஜா ஹெக்டே தெலுங்கி சினிமா உலகில் நம்பர் ஒன் நடிகையாக இருந்து வருகிறார். தமிழில் இவர் ஜீவாவுடன் முகமூடி என்ற படத்தில் நடித்துள்ளார். தளபதி 65 திரைப்படம் வெளியான பின்னர் இவரின் மார்க்கெட் தமிழில் எந்த அளவுக்கு இருக்கும் என்பதை திரைப்படம் வெளியான பின்னர் பார்க்கலாம்.
மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த மாளவிகா மோகனன் தற்போது மிகப்பெரிய நடிகையாக வலம் வருகிறார் அது போல இவரும் மிகப்பெரிய நடிகையாக தமிழிலும் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.