News

தளபதி 65 நடிகை பூஜா ஹெக்டேவுக்கு கொரோனா தொற்று உறுதி !

Published

on

மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி படத்தின் மூலன் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. தற்போது இவர் நெல்சன் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். தற்போது இதன் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்தது. சட்டசபை தேர்தல் முடிந்த பின்னர் இதில் கலந்து கொண்ட விஜய் நேற்று மீண்டும் சென்னை திரும்பினார் படப்பிடிப்பை முடித்து விட்டு.

தளபதி 65 படக்குழுவினருடன் பூஜ ஹெக்டே ஜார்ஜியா சென்று இருந்தார். அங்கு தளபதி மற்றும் பூஜா ஹெக்டே இருவருக்கும் இடையில் காதல் காட்சிகள் மற்றும் டூயட் பாடல் காட்சிகளை அங்கு படமாக்கினர்.

இந்நிலையில் நடிகை பூஜா ஹெக்டேவுக்கு திடீர் என்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது என்று உறுதியானது.

இது குறித்து பூஜா ஹெக்டே தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் எனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் வீட்டில் என்னை தனிமைப்படுத்திகொண்டு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வருகிறேன்.

என்னுடன் சமீபத்தில் தொடர்பில் இருந்த அனைவரும் பரிசோதனை செய்து கொள்ளும்படி கெட்டுக்கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார். பூஜா ஹெக்டேவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending

Exit mobile version