News

தளபதி 65 படத்தின் ஆரம்பகட்ட பணிகள் இன்று முதல் ஆரம்பம் !

Published

on

தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து தளபதி 65 திரைப்படத்தை கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் திரைப்படத்தின் இயக்குநர் நெல்சன் இயக்கவிருக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்க உள்ள நிலையில் இந்த படத்தின் முதல் பணி வேலைகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் போட்டோ ஷூட் இன்று நடைபெற்றதாகவும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் ஸ்டூடியோவில் நடைபெற்ற இந்த போட்டோ ஷூட்டில் தளபதி விஜய் உட்பட ஒரு சிலர் மட்டுமே கலந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இன்று சன் பிக்சர்ஸ் நிறுவன ஊழியர்களுடன் இயக்குநர் நெல்சன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகி வைரலாக பரவி வருகிறது சமூக வலைதளங்களில்.

Trending

Exit mobile version