Connect with us
 

News

டாக்டர் படத்தின் வெளியீட்டு காரணமாக மீண்டும் தாமதமாகும் தளபதி 65 !

Published

on

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா மோகன் நடித்துள்ள திரைப்படம் டாக்டர். அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வெளியீட்டு பணிக்காக வேலைகள் நடந்து வந்தது. இந்நிலையில் இப்படத்தின் வெளியீட்டு தேதியை நேற்று அறிவித்தது படக்குழு மார்ச் 26 உலகமெங்கும் வெளியீடு என்று அறிவித்தது.

இப்படம் வெளியான பின்னரே தளபதி 65 படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்று சொல்கிறது சினிமா வட்டாரம்.

வழக்கமாகவே விஜய் தனது ஒரு படத்தின் வெளியீட்டு பின்னர் ஒரு மாதம் விடுமுறை எடுத்துக்கொள்வார். ஆனால் இப்போது மாஸ்டர் வெளியாகி 3 மாதங்களுக்கு பின்னரே அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார்.

முதலில் தளபதி 65 படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க ஒப்பந்தம் ஆகியிருந்தார் ஆனால் இடையில் தயாரிப்பு நிறுவனத்தும் ஏ.ஆர்.முருகதாஸுக்கும் ஏற்பட்ட சண்டையால் இப்படத்தில் அவர் விலக நெல்சன் ஒப்பந்தம் ஆனார்.

Continue Reading