Connect with us
 

News

திரிஷாவின் கனவு நனவானது

Published

on

காலா படத்தின் வெற்றிக்கு பின்னர் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். சன் பிக்சர்ஸ் மிக பிரம்மாண்டமாக இந்த படத்தை தயாரித்து வருகிறது. அனிருத் இந்த படத்திற்கு இசை அமைக்கிறார். மக்கள் நாயகன் விஜய் சேதுபதி இந்த படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்கிறார்.

இப்படி இருக்க இந்த படத்தின் நாயகி யார் என்பது இது வரை ஒரு புதிராக இருந்தது ரசிகர்களுக்கு இன்று அதற்கு விடை கிடைத்தது. முதல் முறையாக டீ=திரிஷா இதில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கிறார். இதை சன் பிக்சர்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதிபடுத்தியுள்ளது.

ரசிகர்கள் விரும்பும் வகையில் ரஜினிகாந்த் கதாபாத்திரத்தை படத்தில் சித்தரித்து இருப்பதாகவும் இந்த வருடம் இறுதிக்குள் பட வேலைகளை முடித்து அடுத்த வருடம் ஆரம்பத்தில் படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளதாக கார்த்திக் சுப்புராஜ் கூறியுள்ளார்.

Continue Reading