News

துருவ் விக்ரம் நடிக்கும் அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்கின் டைட்டில்

Published

on

நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் இயக்குநர் பாலா இயக்கத்தில் அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக் படத்தில் நடித்து முடித்த நிலையில் அதில் பல காட்சிகள் படக்குழுவிற்கு பிடிக்கவில்லை அதனால் இந்த படத்தை வெளியிட விருப்பமில்லை அதனால் இந்த படத்தை மீண்டும் புது பொலிவுடன் எடுத்து வெளியிட நாங்கள் திட்டுமிட்டு உள்ளோம் என்று தயாரிப்பு தரப்பில் கூறியது.

இந்த நிலையில் இந்த படத்தை அர்ஜுனும் ரெட்டி படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்த கிரிசாயா என்பவர் இந்த படத்திற்கு இயக்குனராக தயாரிப்பு தரப்பில் அறிவிக்க பட்டது. இதனை தொடர்ந்து நேற்று இந்த அப்படத்தின் அதிகார்வ பூர்வ தலைப்பும் வெளியானது இந்த படத்திற்கு ஆதித்ய வர்மா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

விக்ரம் மகன் துருவ் ஜோடியாக பனிதா சந்தூ நடிக்கும் இந்த படத்திற்கு ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்,. ராதான் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

Trending

Exit mobile version