ஒரு ஆடார் லவ் என்ற படத்தின் டீசர் மூலம் இரண்டு வினாடிகளின் கண்ணை சிமிட்டி அணைத்து தரப்பு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் ப்ரியா வாரியர்.
இதன் மூலம் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி என மூன்று மொழிகளிலும் இவருக்கு நடிக்க வாய்ப்பு வந்ததாக கூறப்பட்டது.
சூர்யா- கே.வி ஆனந்த் கூட்டணியில் உருவாகவிருக்கும் படத்தில் ப்ரியா வாரியரை ஹீரோயினாக நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடிபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தற்போது சூது கவ்வும், காதலும் கடந்து போகும் இயக்குநர் நலன் குமாராசாமி படத்தில் ப்ரியா வாரியர் ஹீரோயினாக நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது விரைவில் அதிகார்வபூர்வ தகவல் வெளியாகும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.