News

நான் கொஞ்சம் வேகமா ஓடுவன் நீ ஆட்டோ பிடிச்சி வந்திரு – யோகி பாபு

Published

on


லேடி சூப்பர் ஸ்டார் முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடித்து மார்ச் 28ம் தேதி வெளியாக உள்ள படம் ஐரா. இந்த நிலையில் இந்த படத்தை விளம்பர படுத்துவதில் மிரட்டி வருகிறது தயாரிப்பு தரப்பு மற்றும் படக்குழுவினர்.

அதில் ஒரு பகுதியாக தமிழக ரிலீஸ் உரிமத்தை பெற்றுள்ள கே.ஜே .ஆர் .ஸ்டுடியோஸ் ஒரு விளம்பர பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளது. இந்த டுவீட்டில் நயன்தாராவும் யோகிபாபுவின் ஓட்டப்போட்டிக்கு தயாராகுவது போல் உள்ளது. அப்போது யோகிபாபு நயன்தாராவிடம், ‘அப்புறம் நான் கொஞ்சம் இல்ல ரொம்ப வேகமா ஓடுவேன், உன்னால முடியலைனா ஷேர் ஆட்டோ புடிச்சி வந்துடு ஓகே” என்று சொல்வது போல் அந்த டுவீட் உள்ளது.

லேடி சூப்பர் ஸ்டாரை கிண்டல் செய்யும் அந்த அந்த பதிவை அணைத்து ரசிகர்களும் பகிர்ந்து வருகிறார்கள். கோலமாவு கோகிலா’ படத்தில் யோகிபாபுவின் கலாய்ப்பு நடிப்பை ரசித்த நயன்தாரா இந்த படத்திலும் அவர்தான் நடிக்க வேண்டும் என்று இயக்குனரிடம் பரிந்துரை செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சார்ஜுன் இயக்கத்தில் பிரியங்கா ரவீந்திரன் எழுத்தில் ருவாகியுள்ள இந்த படத்தில் நயன்தாரா, கலையரசன், யோகிபாபு, ஜெயப்பிரகாஷ், லீலாவதி உள்பட பலர் நடித்துள்ளனர். கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையில் சுதர்சன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பில், கார்த்திக் ஜோகேஷ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் இந்த ஆண்டின் பெரும் எதிர்பார்ப்புக்குரிய படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version