News

நேருக்கு நேர் மோதலுக்கு தயாராகும் ஹீரோக்கள்

Published

on


இந்த ஆண்டின் தீபாவளி திருநாளில் தளபதி விஜய் நடிக்கும் ‘பிகில்’ படமும் கார்த்தி நடிக்கும் ‘கைதி’படமும் வெளியாகும் என அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனாலும் இரு படங்களும் வேறு வேறு தேதிகளில் வெளியாகும் என எதிர்பார்த்தனர். அதாவது ‘பிகில்’படம் அக்டோபர் 25-தேதி அன்றும் ‘கைதி’ தீபாவளி தினம் அன்றும் வெளியாகும் என எதிர்பார்த்திருந்த ரசிகர்களும் பெரும் அதிர்ச்சி.

இன்று மாலை 6 மணிக்கு ‘பிகில்’படத்தின் வெளியீட்டு தேதியை வெளியிட்டது படக்குழு அதை தொடர்ந்து கைதி படத்தின் வெளியீட்டு தேதியையும் அந்த படக்குழு வெளியிட்டது அதாவது இரண்டு படங்களுமே அக்டோபர் 25-தேதி அன்று நேருக்கு நேர் வெளியாகி மோத உள்ளது.

இப்படி வெளியாகும் நிலையில் நிச்சயசம் ஒரு படம் பலமாக வசூல் ரீதியில் பாதிப்பு வரும் படமாக இருக்கும்.

Trending

Exit mobile version