News

பலத்தை சுவைக்கும் முன்பே விதையை முடிவு செய்யாதீர்கள் பதிலடி கொடுத்த – ஓவியா

Published

on


பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் நடிகை ஓவியா நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் படம் 90ML இந்த படத்தை பெண் இயக்குனர் அனிதா உதீப் இயக்கு உள்ளார் என்பது ஒரு பெருமைக்குரிய விடயம்.

இந்த படத்துக்கு சிம்பு இசையத்திருக்கிறார். இந்த படத்திற்கு தணிக்கை குழு ‘A’ சான்றிதழ் வழங்கியுள்ளது. குறிப்பாக இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகும் போது இதை 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே பார்க்க வேண்டும் ஒரு தகவலுடன் வெளியானது.

இது குறித்து சினிமா தாயாரிப்பாளர் தனஞ்செயன் வசை பாடியுள்ளார் அவர் கூறியதாவது. இந்த டிரெய்லரில் டபுள் அர்த்தம் கொண்ட வார்த்தைகள், அதிகமான கவர்ச்சி நிறைந்த காட்சிகள் இடம் பெற்றுள்ளது. எனக்கு வருத்தமாகவும், கோபமாகவும் உள்ளது, பணத்துக்காக இதுபோல் இளைஞர்கள் இச்சை உணர்வைத் தூண்டும் படங்களை எடுக்கின்றனர். இது போன படங்கள் ஒழிய வேண்டும் இந்த படத்தின் டிரெய்லரை நான் பார்த்து மிகவும் மனம் வருத்தமடைகிறேன் என்று கூறியுள்ளார்.

இது போன்று பலரும் விமர்சனம் செய்து வந்த நிலையில் இவைக்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக கருது ஒன்றை தெரிவித்து உள்ளார் அதில் அவர் கூறியது பழத்தை சுவைக்கும் முன்பே விதையை தீர்மானிக்காதீர்கள். முழுப் படத்தையும் பார்க்கும் வரை காத்திருங்கள். டிரெய்லரைப் பார்த்து முழுப் படத்தையும் தீர்மானிக்காதீங்க” என்று பதிலளித்துள்ளார்.

Trending

Exit mobile version