News

பல மாத காத்திருப்புக்கு பின்னர் வலிமை படம் அப்டேட் தெறிக்க விடும் அஜித் ரசிகர்கள் !

Published

on

எச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் திரைப்படம் ‘வலிமை’ இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆனாலும் ரசிகர்கள் அப்டேட் கேட்டு கடந்த பல மாதங்களாக தயாரிப்பாளரை கேட்டு தொல்லை கொடுத்து வருகிறார்கள்.

பல ரசிகர்கள் அப்டேட் கொடுக்கவில்லை என்று போஸ்டர் எல்லாம் அடித்து வீதி வீதியாக ஒட்டினர். ஆனாலும் ரசிகர்களின் கோரிக்கைக்கு எந்த ஒரு பதிலும் கொடுக்காமல் இருந்தது தயாரிப்பு நிறுவனம். இந்நிலையில் அஜித் அவர்களின் மேனேஜர் சுரேஷ் சந்திரா அவர்களின் ரசிகர்களின் யாரும் அவசர பட வேண்டம் குறித்த நேரத்தில் அப்டேட் வரும் என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

இந்நிலையில் அஜித்தின் நடிக்கும் ‘வலிமை’ படத்தின் வெளிநாட்டு உரிமையை பிரபல நிறுவனமான யுனைட்டட் இந்தியா அதிக தொகை கொடுத்து கைப்பற்றியுள்ளதாகவும் அஜித்தின் முந்தைய படங்களை விடவும் இந்த படம் அதிக விலைக்கு போயுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

இப்படத்தில் அஜிதுடன் தெலுங்கு நடிகரான கார்த்திகேயா உள்ளிட்ட பல பிரபல முன்னணி நடிகர் மற்றும் நடிகைகள் வடித்து வருகிறார்கள் இப்படம் கோடை விடுமுறையில் வெளியாகும் என தெரிகிறது.

Trending

Exit mobile version