News

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் நடிகை சித்ரா தற்கொலை அதிர்ச்சியில் ரசிகர்கள் !

Published

on

சின்னத்திரை நடிகை சித்ரா தான் தங்கியிருந்த ஹோட்டலில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். சித்ராவுக்கு ஹேம்நாத் என்பவருடன் திருமணம் நிச்சயமாகியிருந்தது. அவருடன்தான், சித்ரா ஹோட்டலில் தங்கியிருந்தார். பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற டிவி தொடரில் முல்லை கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழடைந்தவர் சித்ரா. திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்தவராகும்.

புற நகர் பகுதியில் சூட்டிங் நடைபெற்றதால், டிவி சீரியலில் நடிப்பதற்காக, சென்னை, நசரத்பேட்டையிலுள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தார் சித்ரா. அந்த ஹோட்டலில்தான் தூக்குப்போட்ட நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தினமும் திருவான்மியூர் சென்று வந்து சூட்டிங்கில் பங்கேற்க முடியாது என்பதால் நட்சத்திர ஓட்டலில் அவர் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

28 வயதான சித்ராவுக்கு, 4 மாதங்கள் முன்பு, ஹேம்நாத் என்பவருடன் திருமணம் நிச்சயமாகியிருந்தது. அவரும் இதே ஹோட்டலில் சித்ராவுடன் தங்கியிருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று அதிகாலை 2.30 மணிக்கு சூட்டிங் முடிந்த பிறகு ஹோட்டலுக்கு திரும்பியுள்ளார் சித்ரா.

அப்போது தான் குளிக்கப்போவதாகவும், எனவே நீங்கள் வெளியே நில்லுங்கள் என்றும் ஹேம்நாத்திடம் சித்ரா கூறியுள்ளார். இதையடுத்து ஹேம்நாத் ரூமை விட்டு வெளியே வந்துள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் கதவைத் திறக்கவில்லை. கதவை தட்டிப் பார்த்தும், பதில் வரவில்லை.

எனவே அதிர்ச்சியடைந்த ஹேம்நாத் மாற்று சாவி கொண்டு திறந்து உள்ளே போய் உள்ளார். அப்போதுதான் அங்கு சித்ரா புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விஷயம் தெரிய வந்துள்ளது. இதையடுத்து காவல் துறைக்கு அவர் தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில் போலீசார் சென்று சித்ரா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Trending

Exit mobile version