News

பிகில் படத்தின் டீஸர் இணையத்தில் லீக்கானதா?

Published

on

அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் பிகில் படத்தின் இசை வெளியீடு கடந்த வாரம் வெளியானது இதனை தொடர்ந்து பிகில் படத்தின் டீஸர் வெளியீட்டு வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில் யாரோ அதை திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியிட்டு விட்டனர் என்ற செய்தி வெளியாக பெரும் அதிர்ச்சியை படக்குழுவிற்கு ஏற்ப்படுத்தியுள்ளது.

பிகில் படத்தின் டீசரை நான் பார்த்து விட்டேன் என்றும் படத்தின் டீஸர் வெறித்தனமாக இருப்பதாகவும் ஆனால் அதிகார்வப்பூர்வ டீஸர் வெளியீட்டுக்காக நான் காத்திருக்கிறேன் என்று ஒரு ரசிகர் பதிவு ஒன்றை பதிவிட்டு இருந்தார்.

இதை பார்த்த தளபதி ரசிகர்கள் பலர் இணையத்தில் பிகில் படத்தின் டீஸர் இணையத்தில் லீக் ஆனது உண்மைதான் என்று நாங்களும் அதை பார்த்தோம் என்று பதிவுகளை பதிவிட்டனர்.இந்த பதிவுகளை பார்த்த படக்குழு பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

கடும் பாதுகாப்பிற்கும் மத்தியில் டீசரை தயார் செய்து வந்தும் எப்படி லீக் ஆனது என்று படக்குழு உண்மையாகவே அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.மேலும் இது குறித்து விசாணை செய்ய படக்குழு உத்தரவு கொடுத்துள்ளனர்.

இதற்கு முன்னதாக இப்படத்தின் சிங்க பெண்ணே மற்றும் விஜய் பாடிய வெறித்தனம் பாடல்கள் அதிகார்வப்பூர்வ வெளியீட்டுக்கு முன்னதாக இணையத்தில் கசிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது டீஸரும் கசிந்து விட்ட நிலையில் விரைவில் டீஸரை வெளியிட வேண்டும் என்ற முடிவில் தற்போது படக்குழு உள்ளதாம்.

Trending

Exit mobile version