News
புகைப்பட கலைஞர்கர்களுக்கு படத்தை இந்த படத்தை சமர்ப்பிக்கிறேன் – ப்ரியதர்ஷன்
உதயநிதி ஸ்டாலின், நமீதா பிரமோத், பார்வதி நாயர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் நடிப்பில் வெளியாகியுள்ள ‘நிமிர்’ படம் பிரபல இயக்குனர் ப்ரியதர்ஷனின் அழகான, அழுத்தமான கதை சொல்லலாலும் உதயநிதியின் யதார்த்தமான நடிப்பாலும் மக்களை கவர்ந்து வெற்றியை நோக்கி வேகமாக நகர்ந்துகொண்டிருக்கின்றது.
எல்லா தரப்பு ரசிகர்களாலும் பாராட்டப்படும் ‘நிமிர்’ படத்தில் கதாநாயகன் உதயநிதி ஒரு .புகைப்படக்கலைஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மிக யதார்த்தமாக கையாடப்பட்டுள்ள இந்த கதாபாத்திரம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தை பார்த்த சில புகைப்படக்கலைஞர்கள் ‘இப்படம் புகைப்படக்கலைஞர்களுக்கு ஒரு பெரிய பெருமை’ என கூறியுள்ளனர்.
இதனையொட்டி, சென்னையை சார்ந்த பிரபல புகைப்படக்கலைஞர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்களுக்கு ஒரு பிரத்தியேக காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. படத்தை பார்த்த இவர்கள், படத்தையும் உதயநிதியின் கதாபாத்திரத்தையும் அவரது நடிப்பையும் மிகவும் ரசித்து மனதார வாழ்த்தி பாராட்டியுள்ளனர். அவர்களுக்கு பிரத்தியேக நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டன. R D ராஜசேகர், ராபர்ட், G P கிருஷ்ணா, பாலமுருகன், கார்த்திக் ராஜா , CJ ராஜ்குமார், ஆர்ம்ஸ்ட்ரோங், S R சதீஷ் குமார் மற்றும் கிச்சாஸ் ஆகியோர் இந்த பிரத்தியேக காட்சியை கண்டு ரசித்தனர்.
இது குறித்து இயக்குனர் ப்ரியதர்ஷன் பேசுகையில் , ” ஒளிப்பதிவில் ஜாம்பவானாக இருந்த வின்சென்ட் மாஸ்டர் அவர்கள் தான் எனது வாழ்வில் மிகப்பெரிய உந்துதலாக இருந்துள்ளார். அவரால்தான் எனக்கு புகைப்பட கலைஞர்கள் மீதும் ஒளிப்பதிவாளர்கள் மீதும் எனது மரியாதை மேலும் கூடியது. ‘நிமிர்’ படத்தை அவருக்கு சமர்ப்பிக்கிறேன். இந்த தருணத்தில், மண் வாசனையின் முக்கியத்துவத்தை எனக்கு உணர்த்திய இயக்குனர் பாரதிராஜாவிற்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்”
பிரபல ஒளிப்பதிவாளர் PC ஸ்ரீராம் இந்த காட்சியில் கலந்துகொண்டு படத்தை ரசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
‘நிமிர்’ படத்தை சந்தோஷ் T குருவில்லா தயாரித்துள்ளார். சமுத்திரக்கனி, M S பாஸ்கர், கருணாகரன் மற்றும் ஷண்முகராஜ் ஆகியோர் முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவில் , அஜனீஷ் லோக்நாத் மற்றும் தர்புகா சிவாவின் இசையில் , அய்யப்பன் நாயர் MS படத்தொகுப்பில், மோஹன்தாஸின் கலை இயக்கத்தில் ‘நிமிர்’ உருவாகியது.