News
புகைப்பிடிக்கும் சர்கார் போஸ்டரை நீக்கிய சன் பிக்சர்ஸ் காரணம் என்ன ?
விஜய் பிறந்தநாளை ஒட்டி வெளியானது. மூன்று போஸ்டர்கள் வெளியான நிலையில், அதில் ஒரு போஸ்டரில் விஜய் புகைபிடிப்பது போன்ற ஒரு புகைப்படம் இடபெற்றிருந்தது.
இந்த புகைப்படத்திற்கு அரசியல் மற்றும் சமூக ஆர்வலர்களிடம் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. முக்கியமாக பாமக இளைஞர் அணி தலைவர், அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்தார்.
இதனையடுத்து புகைபிடித்தபடி விஜய் இருக்கும் படங்களை உடனே இணையதளங்கள், சமூக வலைதளங்கள் மற்றும் பொது வெளியில் இருந்து நீக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியது.
எனவே, இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ், தனது சமூக வலைத்தள பக்கத்தில் இருந்து சர்கார் படத்தின் புகைப்பிடிக்கும் போஸ்டரை நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கு என்ன காரணம் என்று இன்று வரை கூற வில்லை இந்த போஸ்டரை நீக்கியதும் விஜய் ரசிகர்கள் கொந்தளித்து திட்டி வருகின்றனர் சன் பிக்ஸர் நிறுவனத்தை அதிலும் ஒரு ரசிகை தைரியம் என்றால் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் போல இருக்க வேண்டும் என்னு குறிப்பிட்டு இருக்கிறார்.