News
பெண்களின் உணர்சிகள் , ஆசைகளை சொல்லும் படம் இது – அனிதா உதீப்
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஓவியா நடித்து வெளி வர இருக்கும் படம் 90ml இந்த படத்துக்கு ‘ஏ’ சேர்ப்பிக்கேட் கிடைத்துள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகி வெகுவாக ரசிகர்கள் மத்தியில் சூட் டை கிளப்பியுள்ளது.
இதை பார்த்த ரசிகர்கள் பலரும் வலைத்தளங்களில் பலரும் விமர்சிக்க ஆரம்பித்தனர். இந்த நிலையில் இந்த படத்தின் இணயக்குநர் அனிதா உதீப் இந்த படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும்.
இந்த படத்தில் பெண்களுக்கு இருக்கும் ஆசை மற்றும் ஆசைகள் அவர்களின் உணர்ச்சிகள் என அனைத்தையும் சொல்லும் படம் இது. பெண்களை ஒரு பொருளாகவே அல்லது அவர்களை உத்தமியா மட்டும் பாக்காதீங்க அவர்களின் கனவு லட்சியம் அனைத்தையும் பாருங்கள் அதைத்தான் இந்த படத்தில் இந்த காலத்திற்கு ஏற்ற போல சொல்லியிருக்கிறேன்.
இந்த படத்தின் கதையை நான் எழுத ஆரம்பிக்கும் போதே எனக்கு நன்றாக தெரியும் நிச்சயம் இந்த படத்திற்கு சான்றிதழ்த்தான் கிடைக்கும் என்று ஏன் என்றால் இந்த கதை அப்படி பட்ட கதை. ஆனால் பதில் தப்பான எந்த ஒரு விஷயமும் சொல்ல வில்லை . ஆனால் பெண்களின் ஆசைகள் பற்றி விபரமாக கூறும் பொது ஒரு சில விஷயங்களை விபரமாக சொல்ல வேண்டும் அப்பிடி சொன்னதால்தான் இந்த ‘ஏ’ சான்றிதழ் கிடைத்திருக்கிறது. இதற்காக நான் ஒரு துளிகூட கவலை கொள்ள வில்லை.