Connect with us
 

Reviews

பொன்மகள் வந்தாள் – விமர்சனம்

Published

on

Cast :Jyothika,R.Parthiban,K.Bhagyaraj,Thiagarajan,Pandiarajan,Pratap Pothen,Vasuki,Vidya Pradeep,Gajaraj And Others
Production : 2D Entertainment
Director : J.J.Fredrick
Editor : Ruben
Cinematographer : Ramji
Music : Govind Vasantha
Pro : Yuvaraj
Language : Tamil
Censor :
Runtime : 2 Hour 00 Mins
Release Date : 14 February 2020

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஜே.ஜே.ப்ரெட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா வழக்கறிஞராக நடித்துள்ள படம் பொன்மகள் வந்தாள். இந்தப் படத்தில் பாக்யராஜ், பாண்டியராஜன், பிரதாப் போத்தன், தியாகராஜன், பார்த்திபன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

2004 -ஆம் ஆண்டு ஊட்டியில் 5 குழந்தைகளை கடத்தி கொலை செய்யப்படுகின்றனர். மக்கல் மத்தியில் பரபரப்பை ஏற்பருத்த இந்த வழக்கில் வடமாநில சைக்கோ கொலையாளி ஆன ஜோதி என்ற பெண்தான் குழந்தைகளை கடத்தி கொன்றதாக குற்றம்சாட்டப்படுகிறாள்.

ஜோதி ஒரு பெண் குழந்தையை கடத்திச் சென்றதாகவும் அதை தடுக்க முயன்ற 2 இளைஞர்களை சுட்டுக்கொன்றாதகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. ஒரு கட்டதில் ஜோதி என்கவுண்டரில் சுட்ட்கும் கொள்ளப்படுகிறாள்.

சைக்கொ கொலையாளி என சித்தரிக்கப்பும் ஜோதி நிரபராதிதான் என்று பாக்யராஜ் அந்த வழக்கை மீண்டும் நடத்த முன்வருகிறார். அதில் வழக்கறிஞராக வருகிறார் இவரின் மகளான வெண்ப(ஜோதிகா) பச்ச வயசு பிள்ளைங்கள கழுத்த அறுத்து கொளை செய்த ஒரு கொலைகார பெண்ணுக்கு வக்காலத்து வாங்கிட்டு வறியே இது உனக்கு அயோக்கியதமான தெயவில்லையா என் பாக்கியராஜை பார்த்து பாண்டியராஜன் கேட்கும் ஒரு கேள்வியிலேயே தெரிந்து விடுகிறது இந்த வழக்கின் மீதும் அந்த ஜோதி என்ற பெண் மீதும் மக்களுக்கு இருக்கும் ஆவேஷம்.

தனது முதல் வழக்கான ஜோதி கேஸில் ஆஜராக வரும் ஜோதிகாவிற்க்கு எதிர்ப்பும் செருப்படிகளும் கிடைக்கிறது. சாட்சியள் அனைத்தும் மூடி மறைக்கப்பட்ட நிலையில் வேறு வழியில்லாமல் ஜோதி குற்றவாளி இல்லை அதை என்னால் மட்டுமே உண்மையுடன் கூற முடியும் அங்கு என்ன நடந்தது என்று எனக்கு மட்டும்தான் தெரியும் என்று ஜோதிகா கூற. எப்படி என்று நீதிபதி கேட்க நாந்தான் நீங்கள் குற்றவாளி என்று கூறும் ஜோதியின் மகள் என்று கூறி உண்மையை போட்டு உடைக்கிறார் ஜோதிகா. இதற்க்கு பின்னர் அடுத்த அடுத்த காட்சிகள் என்ன? ஜோதிகா உண்மையாகவே ஜோதியின் மகளா ஜோதியின் கொளைக்கு பின்னால் இருக்கும் உண்மையை வெளிக்கொண்டு வந்தாரா என்பதே படத்தின் மீதிக்கதை.

முதல் முறையாக வழக்கறிஞராக நடித்துள்ளா ஜோதிகா நடிப்பில் அசத்தியுள்ளார். தன் மீது செருப்பை வீசும் பெண்ணை நோக்கி அந்த செருப்பை எடுத்து சென்று ஒர் செருப்புடன் வீட்டுக்கு எப்படி போவிங்க என்று அதை திருப்பி கொடுக்கும் காட்சி அருமை.

அதிகாரம் ,மரியாதை,அரசியல் , பணம் ,செல்வாக்கு கொண்ட பெரிய மனிதராக வரும் தியாகராஜன் மிரட்டலான நடிப்பை வெளிப்படித்தியுள்ளார். குறிப்பாக இவர் கோவம் கொண்டதும் ஒற்றை கண்ணை மட்டும் துடிக்க விடுவார் அது எல்லாமே வில்லனுக்கே உண்டான காட்சிகள். ஜோதிகாவின் அப்பாவாகவும் பெட்டிஷன் பெத்தராஜாகவும் வரும் பாக்ராஜ் ஆர்ப்பாட்டம் இல்லாமல் அளவாக நடித்திருக்கிறா.

பிரபல கிரிமினல் வக்கீலாக வரும் பார்தீபன் அரசி வழக்கறிஞராக இறங்கியது படம் டாப் வேகத்தில் நகர்கிறது. தனது வழக்காம அலட்டல் இல்லாத நக்கள்,நையாண்டி கலந்த மாறுபட்ட நடிப்பால் ரசிக்க வைக்கிறார்.

5 குழந்தைகளை கொண்ற சைக்கோ கொலையாளிக்கு ஏன் ஜோதிகா ஆஜராக வேண்டும் என்ற எண்ணம் படம் பார்த்த நம் அனைவருக்கும் மனதில் வந்த கேள்வ. சமூகத்தில் மிகப்பெரிய மனிதராக இருக்கும் தியாகராஜன் பார்த்தீபனை இந்த வழக்கில் ஆஜராஜ சொல்லும் போதெ தெரிந்து விடுகிறது ஏதொ ஒன்று பெரிதாக நடந்திருக்கிறது. வெண்பா (ஜோதிகா) சைக்கோ கொலையாளி ஜோதியின் மகள் என்று சொல்லும்போது படத்தின் மேள் உள்ள ஆர்வம் நமக்கு அதிகமாக ஒட்டிக்கொள்கிறது.

என் பையன் ஆச்சே அதனால்தான் அவன் செய்த பாவத்திற்க்கும் சேர்த்து இப்போ என் கையை கழுவுகிறேன். இந்த ஊர்ல இருக்கிற நல்ல பெயர் உனக்கு தெரியுமில்ல நான் சாகுற வரைக்கும் அது எனக்கு வேணும் என்று அழுத்தமான வில்லன் குரலில் தியாகராஜன் பேசும் வசனங்கள் நமக்கு சொல்லாமல் பல விஷயங்களை புரிய வைக்கிறது.

குற்றாளிகள் கிடைக்கவில்லை என்றாள் வட நாட்டவரின் சதி என்று முடிக்க முடியாத வழக்குகளை முடிக்கும் போலீஸ் அதிகாரிகள் என்றும் நம் நாட்டில் இருக்கிறார்கள் என்று ஜோதிகா சொல்லும் உண்மைகளை நாம் ஏற்றுக்கொள்ளதான் வேண்டும். குழந்தைகளுக்கு எதிராக நடத்தப்படும் பாலியல் குற்றங்கள் அதிகரிக்க காரணம் எந்த குழந்தையும் தனக்கு நேர்ந்த கொடுமையை வெளியே சொல்லப்போவதில்லை என்ற எண்ணமும்,பெண் குழந்தைகளை பார்த்து பார்த்து வளர்க்கும் பெற்றோம் தங்களது ஆண் குழந்தைகளுக்கு பெண்களை எப்படி பார்க்க வேண்டும் எப்படி பழக வேண்டும் என்று எப்படி மதிக்க வேண்டும் என்று கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற ஒரு இன்றைய வாழ்க்கைக்கு இளைஞர்களுக்கு ஆழமான கருத்தை அறிமுக இயக்குநர் ஜே.ஜே.பெறில் மிக அழுத்தமாக பதிவு செய்து விட்டு செல்கிறார்.

யாருமே எதிர் பார்க்காத வகையில் படத்தின் இறுதியில் வரும் டுவிஸ்ட் ரசிகர்களை சுவாரஸ்யப்படுத்துகிறது. வலிகலோடு கடக்கும் இறுதிக்கட்ட காட்சிகள் நிச்சயமாக படம் பார்க்கும் நம் அனைவரையும் கண் கலங்க வைக்கும்.

மொத்ததில்’பொன்மகள் வந்தாள்’ பண பலமும்,அரசியல் பலமும் கொண்ட பல பாலியல் குற்றங்களை செய்யும் மிருங்களுக்கு சரியான சாட்டை அடி கொடுக்க வந்திருக்கிறாள்.