News

போடா போடி பாகம் 2 இயக்குநர் விக்னேஷ் சிம்பு மீண்டும் இணைகிறார்களா?

Published

on

சில வருடங்களாக மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படங்களின் இரண்டாம் பாகங்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் சிம்புவின் வெற்றி படமான ஒன்றின் இரண்டாம் பாகம் பற்றி அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

2012 ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்குநராக அறிமுகமான திரைப்படம் ‘போடா போடி’ இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் சிம்பு மற்றும் வரலட்சுமி நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்றது. தற்போது வெளியான தகவலின்படி முதல் படத்தை தயாரித்த குமார் இப்படத்தையும் தயாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிம்புவுக்கு ஜோடியாக அறிமுக நடிகை ரித்திகாபால் என்பவர் நடிக்க இருப்பதாக தயாரிரிப்பு நிறுவனம் அறிவித்தது. இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவில்லை என்றும் வேறு ஒரு இயக்குநர் இயக்க இருப்பதாக அவருடைய பெயர் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறுனார் தயாரிப்பாளர் குமார்.

இப்படத்துக்கு முதல் பாகத்தில் இசையமைத்த தரண் குமார் இந்த படத்தில் இசையமைக்க இருப்பதாகவும் இந்த படமும் முதல் பாகம் போலவே இசை, நடனம் சம்பந்தப்பட்ட படம் என்றும் அவர் கூறினார். இப்படத்தின் படப்பிடிப்பு 2021 ஆம் ஆண்டும் ஜூன் மாதம் தொடங்கும் என்றும் ஒரே ஷெட்யூலில் வெளி நாட்டில் இந்த படத்தை முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Trending

Exit mobile version