News

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிக்கும் 46வது படத்தின் அப்டேட் வெளியீடு !

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் விஜய்சேதுபதியும் ஒருவர் தற்போது அவர் நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது ரஜினிகாந்த், விஜய் மற்றும் சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது விஜய் சேதுபதியும் இவர்களின் தயாரிப்பு நிறுவனத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்கவிருக்கிறார். பொன்ராம் இதற்க்கு முன்பு சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் மற்றும் சீமராஜா படங்களை இயக்கியுள்ளார்.

இந்த படத்துக்கும் இசையமைப்பாளர் டி,இமான் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் என்றாலே இமான் என்று ஆகிவிட்டது சிறப்பு.

Trending

Exit mobile version