News
எஸ்.ஜே.சூர்யா இல்லாமல் மாநாடு படப்பிடிப்பு நிறுத்தி வைப்பு !

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கதில் சிலம்பரசன் நடித்து வரும் திரைப்படம் மாநாடு கல்யாணி பிரியதர்ஷன் ஜோடியாக நடித்து வருகிறார்.மிகவும் முக்கியமான கதாப்பாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்து வருகிறார்.
மிகவும் நீண்ட காலமாக படப்பிடிப்பு நடந்து வருகிறது சில மாதங்களுக்கு முன்னர் படத்தின் மோஷன் போஸ்ட மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தது.
இந்நிலையில் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மட்டுமே இன்னும் மீதவுள்ள நிலையில் படத்தின் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா தற்போது சிவகார்த்திகேயனின் டான் படத்தில் நடிக்க சென்றுவிட்டதால் அவர் இல்லாமல் படப்பிடிப்பை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து டான் படப்பிடிப்பை மார்ச் மாதம் முடித்து கொடுத்துவிட்டு பின்னர் மாநாடு படத்தில் நடித்து கொடுக்கிறேன் என்று வாக்கு கொடுத்துள்ளார் நம்ம எஸ்.ஜே.சூர்யா அவர்கள்.