Connect with us
 

News

மாயா படப்புகழ் ஆரி கதாநாயகனாகநடிக்கும் நாகேஷ் திரையரங்கம்

Published

on

ட்ரான்ஸ் இந்தியா மீடியா நிறுவனத்தின்திரு.இராஜேந்திர எம்.இராஜன்அவர்களின்தயாரிப்பில் உருவாகியிருக்கும் முதல் படைப்பு “நாகேஷ் திரையரங்கம்”. ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட “அகடம்” திரைப்படத்தை இயக்கிகின்னஸ் சாதனைபடைத்தஇசாக்இயக்கியுள்ள திரைப்படம் இது.

“நெடுஞ்சாலை”, “மாயா” படப்புகழ் ஆரிகதாநாயகனாகநடிக்கும் இந்த படத்தில் “வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” “இனிமே இப்படி தான்” படங்களில் நடித்த ஆஷ்னா சவேரி ஜோடியாக நடிக்கிறார். காளி வெங்கட், மும்பை மாடல் மாசூம் சங்கர்மற்றும் பலர் நடித்துள்ளனர். சிறிய இடைவேளைக்குப் பின் இந்த படத்தில் முக்கிய கதாபத்திரத்தில்எம்.ஜி.ஆர்.லதாவும், நடிகைசித்தாராவும்நடித்திருக்கிறார்கள்.

நௌஷாத் ஒளிப்பதிவில், ஸ்ரீ இசையில்,தேவராஜ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள “நாகேஷ் திரையரங்கம்” வரும்பிப்ரவரி 16 அன்று வெளியாக உள்ளது.

தமிழ் சினிமாவில் இன்று வரையிலும் எண்ணற்ற திகில் படங்களும் பேய் படங்களும் வந்திருந்தாலும் அவற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்ட விதத்தில் கதையும் திரைக்கதையும் அமைத்துள்ளார் இயக்குனர் இசாக். திரையரங்கில்பேய்என்னும் புதிய கோணத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்த படம் திகில் பட பிரியர்களை மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Continue Reading